/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சிபாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 29, 2010 02:59 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் பள்ளி பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில், 126 பேர் பொதுத்தேர்வு எழுதினர். இதில், 10 பேர் 480 மதிப்பெண்ணுக்கு மேலும், 28 பேர் 470 மதிப்பெண்ணுக்கு மேலும், 59 பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றுள்ளனர். மாணவி ஸ்ருதி பார்கவி 488 மதிப்பெண் பெற்று, கோவை வருவாய் மாவட்டத் தில் மெட்ரிக் பள்ளிகளில் முதலிடத்தையும், மாணவி பிரியதர்ஷினி 486 மதிப்பெண் பெற்று கோவை வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றனர். மாணவர் அரவிந்த் 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பிடித்தார். கணிதத்தில் 12 பேரும், அறிவியலில் 15 மாணவர்களும் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளி செயலாளர் சாந்தா காளிங்கராயர் பாராட்டினார்.